அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது


அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 April 2018 4:44 AM IST (Updated: 23 April 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாட்டறம்பள்ளி,

திருப்பத்தூரில் இருந்து வெலக்கல்நத்தம் செல்லும் அரசு டவுன் பஸ் கடந்த 19-ந் தேதி புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் திருநாவுக்கரசு ஓட்டினார்.

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை சந்தை வழியாக செல்லும்போது, திருநாவுக்கரசு ‘ஹாரன்’ அடித்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்

சென்ற கல்நார்சம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன் (வயது 20), திவாகர் (19), புஷ்பராஜ் (20) ஆகிய 3 பேரும் பஸ்சை மறித்து டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் டிரைவர் திருநாவுக்கரசு, கண்டக்டர் கமலேசன் ஆகிய 2 பேரையும் அடித்து உதைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் காயம் அடைந்த திருநாவுக்கரசு, கமலேசன் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசன், திவாகர், புஷ்பராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

Next Story