மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் கலெக்டரிடம் மாணவர்கள் மனு
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மாணவர்கள் மனு கொடுத்தனர்.
திருச்சி,
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது திருச்சி பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி பிராட்டியூரில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆனால் அங்கு 8-ம் வகுப்புக்கு மேல் பயில செல்லாமல் 60 சதவீதம் மாணவ-மாணவிகள் இடைநின்று விடுகிறார்கள். இந்த பகுதியில் 6 கி.மீ. சுற்றளவுக்கு உயர்நிலைப்பள்ளி இல்லை. நிதிஉதவி பெறும் பள்ளி மட்டுமே இருப்பதால் ஏழை, எளிய மாணவர்களால் கட்டணம் செலுத்தி படிப்பை தொடர முடியவில்லை. ஆகவே மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினால் ஏழை மாணவர்கள் 8-ம் வகுப்புக்கு மேல் தங்களது கல்வியை தொடர முடியும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
திருச்சி வரகனேரி பகுதி மக்கள் கொடுத்த மனுவில், “திருச்சி வரகனேரி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை ஓயாமரி சுடுகாட்டில் தான் தகனம் செய்வது வழக்கம். இந்தநிலையில் சுடுகாட்டில் கால பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுடுகாட்டின் பயன்பாட்டில் உள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள நீர்ஆதாரங்களையும், இறுதி சடங்கின் அறையையும் சட்டவிரோதமாக கைப்பற்றி உள்ளனர். இதனால் இறுதி சடங்குக்கு வருபவர்கள் தங்கள் தேவைக்கு லாரிகளில் விலைக்கு தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி கேட்டால் அங்கு உடல்களை தகனம் செய்ய உரிமையில்லை என்று கூறுகிறார்கள். ஆகவே இதில் கலெக்டர் தலையிட்டு எங்கள் பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் எந்த இடையூறும் ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
திருச்சி உப்பிலியபுரத்தை அடுத்த கோட்டை பாளையத்தை சேர்ந்த கயல்விழி தனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்துடன் கோரிக்கை அட்டைகளை கழுத்தில் தொங்கவிட்டு கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த பிரேமா (வயது 46). இவர் எம்.ஏ., எம்.பில். படித்துள்ளார். இவர் தனக்கு வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரது முகத்தில் தண்ணீரை தெளித்து அமர வைத்தனர். அதன்பிறகு சிறிதுநேரம் கழித்து அவர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு சென்றார்.

Related Tags :
Next Story