ஓசூர் தொகுதிக்குட்பட்ட 5 ஊராட்சிகளில் ரூ.34 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்
ஓசூர் தொகுதிக்குட்பட்ட 5 ஊராட்சிகளில் ரூ.34 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்.
மத்திகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொரப்பள்ளி, ஒன்னல்வாடி, டி.பாரந்தூர், கொத்தகொண்டப்பள்ளி, மாச்சிநாயக்கன்ப்பள்ளி ஆகிய 5 ஊராட்சிகளில் ரூ.34 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார். மேலும் கொத்தகொண்டப்பள்ளி, தேவக்கானப்பள்ளி, மாச்சிநாயக்கனப்பள்ளி, பஞ்சாக்சிபுரம், ஏ.டி.முதுகானப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ரூ.54 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் தொட்டி, சிமெண்ட் சாலை, பல்நோக்கு கட்டிடம் ஆகிய கட்டுமான பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவான மக்களை தேடி அரசு என்ற அடிப்படையில் சிறப்பாக ஆட்சிபுரிந்து வரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அதனடிப்படையில் மக்களை நேரடியாக சந்தித்து பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். அதன்படி ஓசூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு பூமி பூஜையும் நடைபெற்றுள்ளது.
மேலும் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைத்தல், பஸ் வசதி, வீட்டுமனைபட்டா, பகுதி நேர ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி உடனடியாக அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், விமல் ரவிகுமார், தாசில்தார் பண்டரிநாதன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் வி.டி.ஜெயராமன், ஹரிஷ்ரெட்டி, சிட்டி ஜெகதீஷ், சந்திரசேகர், கொத்தகொண்டப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story