மாநில அரசின் தலைமை செயலாளராக தினேஷ் குமார் ஜெயின் நியமனம்


மாநில அரசின் தலைமை செயலாளராக தினேஷ் குமார் ஜெயின் நியமனம்
x
தினத்தந்தி 1 May 2018 5:13 AM IST (Updated: 1 May 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநில அரசின் தலைமை செயலாளராக தினேஷ் குமார் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநில தலைமை செயலாளராக இருந்தவர் சுமித் முல்லிக். இவர் மாநில தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்னும் ஓரிரு நாட்களில் மாநில தகவல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்தநிலையில் மாநில அரசின் புதிய தலைமை செயலாளராக தினேஷ் குமார் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1983-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ். அதிகாாி ஆவார். இவர் மாநில நிதித்துறை தலைமை அதிகாரி ஆக இருந்தார்.

தலைமை செயலாளர் மாற்றப்பட்டதை அடுத்து எம்.எம்.ஆர்.டி.ஏ. ஆணையர், சிட்கோ தலைவர் , மும்பை மாநகராட்சி ஆணையர் போன்ற மாநிலத்தில் மிக உயரிய பொறுப்பில் உள்ள பல அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர்.

இதில் எம்.எம்.ஆர்.டி.ஏ. ஆணையர் யு.பி.எஸ். மதன் மாநில நிதித்துறை தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Next Story