வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்; காங்கிரஸ், ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்பு


வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்; காங்கிரஸ், ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 May 2018 5:39 AM IST (Updated: 2 May 2018 5:39 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நெல்லை,

பாளையங்கோட்டையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு பாதுகாப்பு கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், ம.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் கலந்து கொண்டனர்.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேம்படுத்தும் தேசிய கூட்டமைப்பு சார்பில் நேற்று பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள ஜோதிபுரம் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு பாதுகாப்பு கோரி நடந்த தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டு கொல்லப்பட்டற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும். காயம் பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், பொதுச் செயலாளர் சொக்கலிங்ககுமார், மண்டல தலைவர்கள் தனசிங் பாண்டியன், சுல்தான் இப்ராகிம், ம.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அகமது நவவி, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கனி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், மருத்துவ அணி ஜமால், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ரமேஷ், பகுஜன் ஜமாஜ் கட்சி தேவேந்திரன், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மொத்தம் 26 கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story