சிறுமியை கடத்தி கற்பழித்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது


சிறுமியை கடத்தி கற்பழித்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது
x
தினத்தந்தி 2 May 2018 5:43 AM IST (Updated: 2 May 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்தி கற்பழித்த தொழிலாளிக்கு கீழ்கோர்ட்டு விதித்த 7 ஆண்டு ஜெயில் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

மும்பை,

மும்பை கோவண்டியை சேர்ந்தவர் முகமது ஆசாத் கான். இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமிக்கு திருமண ஆசை காட்டி கற்பழித்து உள்ளார். பின்னர் இருவரும் திடீரென காணாமல் போய் விட்டனர். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணையில் இருவரும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

மேலும் முகமது ஆசாத் கானை கைது செய்து சிறுமியை கடத்தி, கற்பழித்ததாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கோர்ட்டு அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இந்தநிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முகமது ஆசாத் கான் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

ஐகோர்ட்டில் நடந்த விசாரணையின் போதும், அவர் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு கீழ் கோர்ட்டு விதித்த 7 ஆண்டு ஜெயில் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு கூறியது. 

Next Story