விஷம் குடித்த அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளி சாவு உறவினர்கள் சாலை மறியல்
விஷம் குடித்த அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். டாக்டர் உள்பட 2 பேர் தாக்கியதால் இறந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஆலம்பாடி சாலையை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ஸ்டீபன்ராஜ் (வயது 28). இவர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவரை உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் எலி மருந்து சாப்பிட்டு இருப்பது தெரிந்தது.இதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது மயக்கம் தெளிந்த அவரிடம் விசாரித்த போது பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒரு டாக்டர் மற்றும் ஒரு ஆண் செவிலியர் இருவரும் சேர்ந்து தன்னை திட்டி தாக்கினர். இதனால் மனமுடைந்த நான் தற்கொலை செய்து கொள்வதற்காக எலிமருந்து சாப்பிட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் மேலும் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு கூடினர். அப்போது ஸ்டீபன்ராஜ் உடல் ஆம்புலன்சு வேன் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஸ்டீபன்ராஜ் சாவுக்கு காரணமான 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பெரம்பலூர்-துறையூர் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் ஆண் செவிலியர் ஆகிய 2 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனரிடமும் இதே கோரிக்கையை வைத்தனர். இதையடுத்து அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு ஸ்டீபன்ராஜ் உடலை பெற்றுச்சென்றனர். இதனால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

Related Tags :
Next Story