‘கள்’ இறக்குவதை போலீசார் தடுத்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி
விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் துணைபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே தென்னை மரத்தில் ‘கள்’ இறக்க வைக்கப்பட்ட பானைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. துணைபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் தென்னை மரத்தில் இருந்து ‘கள்’ இறக்கி விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. ஒவ்வொரு விவசாயியும் சுமார் 15 மரங்களில் ‘கள்’ இறக்குவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விவசாயிகளின் தென்னந்தோப்புகளுக்கு நேரடியாக சென்று அங்கு தென்னை மரங்களில் இருந்து ‘கள்’ இறக்குவதற்காக வைக்கப்பட்ட பானைகளை அகற்றியும் பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இது தவிர சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை பொங்கலூரை அடுத்த காட்டூரில் உள்ள புளியங்காட்டு தோட்டத்தில் மகேஷ் (வயது 35) என்ற விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ‘கள்’ இறக்கும் பணி நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி தலைமையில் அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு தென்னையில் ‘கள்’ இறக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பானைகளை இறக்கும்படி கூறினார்கள்.
அதன்படி மரத்தில் ‘கள்’ இறக்குவதற்காக கட்டிவைக்கப்பட்டிருந்த பானைகளை தொழிலாளர்கள் மூலம் இறக்கினார்கள். பின்னர் அந்த பானைகள் மற்றும் பிளாஸ்டிக் குடங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றினார்கள். ஆனால் இதற்கு விவசாயி மகேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் இது குறித்து கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போலீசார் அவர்களை பல்லடம் போலீஸ் நிலையத்துக்கு வரும்படியும், அங்கு பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.
இதற்கிடையில் ‘கள்’ பானைகள் ஏற்றப்பட்ட சரக்கு ஆட்டோவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல போலீசார் முயன்றனர். ஆனால் பானைகளை போலீசார் கொண்டு செல்ல விடாமல் தடுத்து சரக்கு ஆட்டோவை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், எங்களுக்கு ஒரு நல்ல முடிவு தெரியவேண்டும். தினசரி போலீசார் எங்களை தொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும். நாங்கள் அனைத்து அதிகாரிகளிடமும் முறையிட்டு விட்டோம். இதற்கு ஒரு முடிவு தெரியாமல் இங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என்று கூறியதுடன் அங்கேயே அமர்ந்திருந்தனர். இதனால் போலீசார் சிலரை அங்கு நிறுத்திவிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சில போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
போலீசார் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விவசாயி மகேஷ் திடீரென்று தனது தோட்டத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற விவசாயிகள் உடனடியாக விரைந்து சென்று அவர் வைத்திருந்த பூச்சி மருந்து பாட்டிலை தட்டி விட்டனர். விவசாயி மகேஷ் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதை பார்த்த அவரது மனைவி விசாலாட்சி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் விவசாயி மகேஷை காரில் ஏற்றி சிகிச்சைக்காக பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட மகேஷூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து பல்லடம் துணைபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் சண்முகம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கோவை மாவட்ட தலைவர் பாபு, பொங்கலூர் வட்டார தலைவர் தங்கவேல், திருப்பூர் மாவட்ட துணை தலைவர் கோகுல்ரவி ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ‘கள்’ இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் போலீஸ் அதிகாரிகள் இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்றதுடன், இத்தகைய நடவடிக்கை தொடரும் என்றும் கூறினார்கள். அதற்கு விவசாயிகள் இது தொடர்பாக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து உரிய அனுமதி பெற்று வருவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Related Tags :
Next Story