பெங்களூருவில், போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது


பெங்களூருவில், போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2018 4:15 AM IST (Updated: 3 May 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

பெங்களூரு அல்சூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக நாகராஜ் மற்றும் மது ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் 2 பேரும் எம்.ஜி.ரோடு அருகே கடந்த 1-ந் தேதி இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது டிரினிட்டி ஜங்ஷன் வழியாக சென்ற பொதுமக்களுடன் 4 வாலிபர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். உடனே அங்கு சென்ற போலீஸ்காரர்கள் நாகராஜ் மற்றும் மது ஆகியோர், அந்த 4 வாலிபர்களையும் அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அந்த வாலிபர்கள் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டு போலீஸ்காரர்கள் நாகராஜ், மதுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், 2 பேரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள்.

இதுகுறித்து அல்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 வாலிபர்களையும் தேடிவந்தனர். பின்னர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் தலைமறைவாக இருந்த 4 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சோமேஷ்(வயது19), சுஷாந்த்(20), தனிஷ் அடராத்(20), நதீம்(19) என்றும், 4 பேரும் தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. அவர்கள் 4 பேர் மீதும் அல்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story