தொழிலாளர்களுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியவர் ஜெயலலிதா - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
தொழிலாளர்களுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியவர் ஜெயலலிதா என்று காஞ்சீபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
காஞ்சீபுரம்,
மே தினத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி, காஞ்சீபுரம் மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மே 1-ந்தேதி தொழிலாளர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். 3 முறை முதல்- அமைச்சராக இருந்து சிறப்பாக ஆட்சி செய்து சத்துணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்தார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் பல சாதனைகளை செய்தார். அவர் ஆரம்பித்த திட்டங்கள் யாவும் தொலை நோக்கு திட்டங்களாகும். எதிர்காலத்தை சிந்தித்து சிந்தித்து தீட்டிய திட்டங்களாகும். உணவு பாதுகாப்பை உறுதி செய்தார். கல்விக்காக ஏகப்பட்ட திட்டங்களை தீட்டி மாநிலத்தின் ஆண்டு வருவாயில் ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
அதை தொடர்ந்து நடைபெறும் தற்போதைய அரசும் அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தற்போது கல்விக்காக ரூ.32 ஆயிரம் கோடி ஒதுக்கி இலவச மடிக்கணினி, இலவச சைக்கிள், இலவச நோட்டுப்புத்தகம் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. சிறுபான்மையினரின் பாதுகாவராக ஜெயலலிதா இருந்தார். தமிழ்நாட்டின் ஜீவாதாரத்திற்கு பங்கம் ஏற்படும் சூழல் உருவாகும்போது அதை தடுக்க சட்டப்போராட்டம் நடத்தி காவிரி, முல்லை பெரியாறு போன்ற உரிமையை பெற்றுத்தந்தார் என்பது வரலாறு.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியதுபோல கட்சி, ஆட்சியை காப்பாற்றவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. காஞ்சீபுரம் நகரம் நெசவாளர்கள் நிறைந்த நகரமாகும். அனைவருக்கும் வேலைவாய்ப்பை தந்து உழைக்கும் தொழிலாளர்களை உருவாக்கும் நகரம் காஞ்சீபுரம் நகரமாகும். அறிஞர் அண்ணா கைத்தறி துணிகளை சென்னை மாநகரத்தில் வீதி வீதியாக விற்றார் என்ற வரலாறு உள்ளது.
தொழிலாளர் தினத்தை உழைக்கும் வர்க்கத்தினரின் தினமாக கொண்டாடி வருகிறோம். தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம்தான் வேலை என்ற சட்டத்தை உருவாக்கியது கம்யூனிஸ்டு நாடு அல்ல. அதை உருவாக்கியது அமெரிக்கா நாடாகும். அதைதான் நாம் மே தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்தியாவில் சென்னை மாநகரில் 1923-ம் ஆண்டு முதன்முதலில் சிங்காரவேலர் சென்னை ஐகோர்ட்டு அருகே மிகப்பெரிய பேரணி நடத்தினார் தொழிலாளர் தினத்தை கொண்டாடினார்.
இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிலாளர் தினத்தை கொண்டாடியது தமிழ் மாநிலம்தான்.
கிட்டத்தட்ட ரூ.5 கோடி செலவில் 1 லட்சம் தொழிலாளர்களுக்காக நலத்திட்ட உதவிகளை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சியில் வழங்கினார். 17 அமைப்பு சாரா நல வாரியம் மூலமாக 14 லட்சம் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு 20 லட்சத்து 68 ஆயிரத்து 229 பயனாளிகளுக்கு ரூ.535 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். 17 அமைப்பு சாரா நல வாரியம் பதிவு செய்யப்பட்டு 60 வயது மூத்தோர்களுக்கு மாதம் ரூ.500 இருந்த உதவித்தொகையை ரூ.1,000 என்று உயர்த்தி கொடுத்தார். மேலும் எண்ணற்ற நலத்திட்ட உதிகளை வழங்கினார். மொத்தத்தில் தொழிலாளர்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கியவர் ஜெயலலிதா.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம், மாவட்ட துணை செயலாளர் அத்திவாக்கம் செ.ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம், அக்ரி கே.நாகராஜன், உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
பின்னர் ஓ. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தி.மு.க. மேல்முறையீடு செய்யபோகிறதே?
பதில்: செய்யட்டும்.
கேள்வி: அரசியலில் 3-வது அணி உருவாகும் என்று தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே?
பதில்: தேசிய அளவிலா, தமிழ்நாடு அளவிலா என்பதை அவர் விளக்க வேண்டும்.
கேள்வி: தமிழ்நாட்டில் காவிரி பிரச்சினை உள்ளிட்ட போராட்டங்கள் அடிக்கடி நடக்கிறதே?
பதில்: நோக்கம் சரியாகவும், வலிமையாகவும் இருக்கவேண்டும். அரசியலுக்காக போராட்டம் நடத்தகூடாது.
கேள்வி: அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா வழக்கு குறித்து?
பதில்: வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
கேள்வி: ராகுல்காந்தி-திருமாவளவன் சந்திப்பு குறித்து?
பதில்: அரசியலில் யாரும், யாரையும் சந்திக்கலாம்.
கேள்வி: தினகரன்-திவாகரன் விவகாரம் குறித்து?
பதில்: நான் நாடகங்கள் அதிகமாக பார்ப்பேன். இதையும் அதே போலத்தான் பார்க்கிறேன்.
கேள்வி: சசிகலாவை இன்னும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கவில்லையே?
பதில்: அவர் சிறைக்கு செல்லும்போதே அந்த தகுதியை இழந்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story