பாண்டுப்பில் கழிவறை இடிந்து விழுந்த இடத்தை மேயர் பார்வையிட்டார்: புதிதாக 15 ஆயிரத்து 774 கழிவறைகள் கட்ட மாநகராட்சி திட்டம்
பாண்டுப்பில் கழிவறை இடிந்து விழுந்த இடத்தை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் நேற்று பார்வையிட்டார்.
மும்பை,
மும்பை பாண்டுப்பில் அண்மையில் பொது கழிவறை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில், இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கையாக மும்பையில் உள்ள அனைத்து பொது கழிவறைகளின் உறுதி தன்மை குறித்து மாநகராட்சி ஆய்வு செய்ய முடிவு செய்து உள்ளது.
மேலும் தற்போது உள்ள 11 ஆயிரத்து 170 கழிவறைகளை இடித்து தள்ளிவிட்டு, அதற்கு பதில் புதிதாக 15 ஆயிரத்து 774 கழிவறைகள் கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், பாண்டுப்பில் கழிவறை இடிந்து விழுந்த இடத்தில் நேற்று மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு விரைவில் புதிய கழிவறை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story