நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த தேசிய மாணவர் படை வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த தேசிய மாணவர் படை வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
x
தினத்தந்தி 3 May 2018 9:00 PM GMT (Updated: 3 May 2018 12:28 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த தேசிய மாணவர் படை வீரர்களுக்கு நேற்று பாளையங்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது.

நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த தேசிய மாணவர் படை வீரர்களுக்கு நேற்று பாளையங்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது.

தேசிய மாணவர் படை 

பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படையில்(என்.சி.சி.) சேரும் மாணவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்படும். இது தவிர ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

அந்த வகையில், இந்த ஆண்டு 9–வது பட்டாலியன் பிரிவின் கீழ் பள்ளிக்கூடங்களில் செயல்படும் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சி, பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 1–ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 14 பள்ளிக்கூடங்களில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள் 500 பேர் பங்கேற்று உள்ளனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சி 

அவர்களுக்கு தினமும் ராணுவ நடை பயிற்சி, முகாம் அமைத்தல், வரைபடம் தயாரித்தல் உள்பட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று காலை நடைபெற்றது.

இந்த பயிற்சியை 9–வது தமிழ்நாடு தேசிய மாணவர் படை சிக்னல் பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரிஷா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அவர்களுக்கு படைப்பிரிவு வீரர்கள் துப்பாக்கி கையாளுதல் மற்றும் குறிபார்த்து சுடுதல் ஆகிய பயிற்சிகளை அளித்தனர். இந்த பயிற்சி வருகிற 10–ந்தேதி (வியாழக்கிழமை) வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

Next Story