ஓசூரில் தி.மு.க.வினர் சாலை மறியல் 30 பேர் கைது
ஓசூரில் கூட்டுறவு சங்க தேர்தல் இறுதிப்பட்டியலை வெளியிடக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரித்தெருவில் கே.கே.-137 ஓசூர் கூட்டுறவு வேளாண்மை வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் 17,937 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து ஓசூர் நகர தி.மு.க. செயலாளர் மாதேஸ்வரன் உள்பட 11 பேர் இயக்குனர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இறுதிப்பட்டியில் நேற்று மாலை வெளியிடப்படுவதாக வந்த தகவலையடுத்து, தி.மு.க.வினர் வங்கி முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து மாதேஸ்வரன் உள்ளிட்ட தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நிலையில், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் வங்கியை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் இறுதிப்பட்டியலை வெளியிடக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், மாதேஸ்வரன் உள்பட தி.மு.க.வினர் 30 பேரை கைது செய்து, ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வங்கி முன் திரண்டு வந்து, கூட்டுறவு தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சி நிர்வாகிகள் 2 பேர் மனு தாக்கல் செய்ததாகவும் ஆனால் அவர்களது மனுவை நிராகரித்து விட்டதாகவும் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் அந்த 2 பேருக்கும் இயக்குனர்களாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மாதேவா, கூட்டுறவு வங்கி உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், இதுகுறித்து பரிசீலித்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை முடிவு தெரிவிப்பதாக வங்கி அதிகாரிகள் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தையொட்டி ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக்ராஜா தலைமையில், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன், அட்கோ இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Tags :
Next Story