கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 May 2018 10:45 PM GMT (Updated: 3 May 2018 9:18 PM GMT)

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு மின்சார வாரிய நாகை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். நாகை கோட்ட தலைவர் வீராசாமி, செயலாளர் ராஜ்மோகன், திட்ட பொருளாளர் ராஜேந்திரன், சீர்காழி கோட்ட செயலாளர் ஆனந்தகுமார், மயிலாடுதுறை கோட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயல் தலைவர் செல்வராஜ் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

துப்புரவு பணியாளர்கள்

ஆர்ப்பாட்டத்தில் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண கமிட்டி அமைக்க வேண்டும். உயர்நீதிமன்ற, தொழிலாளர் ஆய்வாளர் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். பகுதிநேர பணியாளர்கள் பணி செய்யும் விபரம் மீண்டும் கேட்டு பெற்றிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பகுதிநேர பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட துணை தலைவர் குணசேகரன் நன்றி கூறினார்.


Next Story