கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தர்ணா போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் கிராம பகுதி சமுதாய செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் மண்டல அளவிலான தர்ணா போராட்டம் திருவாரூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் கலாராணி (திருவாரூர்), கீதா (நாகை), மாலதி (தஞ்சை) ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தை மருத்துவ கல்வித்துறை மாநில பொதுச்செயலாளர் ரோஸ்லின் விஜயா தொடங்கி வைத்தார். இதில் செவிலியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் இந்திரா கலந்து கொண்டு பேசினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

துணை சுகாதார மையங்களை தனியார்மயம் ஆக்காமல் அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் புதிய சுகாதார துணை மையங்கள் அமைக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்். நான்கு கட்ட பதவி உயர்்வு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது .

இதில் சங்கத்தின் மாநில பொருளாளர் பாத்திமாமேரி, மாநில துணைத்தலைவர் தமிழ்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் தனலெட்சுமி, மாநில செயலாளர்கள் உஷா, சூசைஅந்தோணி, மாவட்ட துணைத்தலைவர் இந்திரா, மாவட்ட இணை செயலாளர்கள் சுனந்தாதேவி, வெற்றிச்செல்வி மற்றும் திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களை சேர்்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்்கள் கலந்து கொண்டனர். 

Next Story