தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் கலெக்டர் பேச்சு


தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 4 May 2018 4:00 AM IST (Updated: 4 May 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் கிராம சுயராஜ்ய இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகள் நல்வாழ்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மண்வளத்தை அவசியம் விவசாயிகள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதற்கேற்றால் போல் உரிய ஈடு பொருட்கள், வேளாண் எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு செலவீனங்களை குறைத்து 2 மடங்கு உற்பத்தி, 3 மடங்கு லாபம் பெற வேண்டும். விவசாயிகள் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், மண் வள அட்டை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வேளாண்மைத்துறை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கல்யாணசுந்தரம், உதவி இயக்குனர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story