சூறாவளி காற்றுடன் மழை: 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
தொட்டியம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் அப்பகுதியில் 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து நாசமாயின. இதற்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள வரதராஜபுரம், சித்தூர், கவுத்தனூர், சீனிவாசநல்லூர், ஏரிகுளம், மகேந்திரமங்கலம், அலகரை, மணமேடு, திருஈங்கோய்மலை, முள்ளிப்பாடி, பாலசமுத்திரம், கார்த்திகைப்பட்டி, அரசலூர், திருநாராயணபுரம் உள்பட பல பகுதிகளில் விவசாயிகள் வாழை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, ஏலரசி போன்ற வாழை ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. சித்திரை மாதத்தில், சித்திரை சுழி காற்று பலமாக வீசும் என்பதால் கடந்த சில நாட்களாகவே இப்பகுதி விவசாயிகள் வாழைக்கு மூங்கில் மற்றும் சவுக்கு கட்டைகளை முட்டுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொட்டியம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல இடங்களில் வாழை மரங்கள் பாதி, பாதியாக முறிந்து விழுந்து நாசமாயின.
ஏக்கருக்கு 10 முதல் 50 வாழை மரங்கள் என சுமார் 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. அதிக பட்சமாக தொட்டியம் வரதராஜபுரம் செல்லும் வழியில் சுரேஷ் என்ற விவசாயி 2 ஏக்கரில் சுமார் 2 ஆயிரத்து 200 பூவன் வாழை சாகுபடி செய்து ஆழ்துளை கிணறு அமைத்து அதனை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் சூறாவளிக்காற்றில் சுமார் 400 வாழை மரங்கள் தாரோடு ஒடிந்து நாசமாயின.
இதுகுறித்து வாழை விவசாயிகள் சிலர் கூறுகையில், இப்பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கடன் வாங்கித்தான் வாழை சாகுபடி செய்துள்ளனர். சூறாவளி காற்றால் ஒரே நாளில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story