சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெரியப்பாவுக்கு அடி-உதை ‘போக்சோ’ சட்டத்தில் கைது


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெரியப்பாவுக்கு அடி-உதை ‘போக்சோ’ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 4 May 2018 3:52 AM IST (Updated: 4 May 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 30). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஆம்பூர்,

முனியப்பன், நேற்று முன்தினம் தனது உறவினர் மகளான 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியை தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து முனியப்பனை பிடித்து அடித்து உதைத்தனர். இதுகுறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முனியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறுமியை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். இதுதொடர்பாக ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார் குழந்தைகள் வன்கொடுமை (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முனியப்பனை கைது செய்தனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு, முனியப்பன் பெரியப்பா முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story