கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே தகராறு


கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே தகராறு
x
தினத்தந்தி 4 May 2018 4:03 AM IST (Updated: 4 May 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தை அடுத்த தட்டாண்குட்டை கிராமத்தில் எட்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் எட்டியம்மன் ஊர்வலம் நடைபெற்றது.

குடியாத்தம்,

தட்டாண்குட்டை  கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் தேர் மீது ஏறி சாமிக்கு மாலை அணிவித்துள்ளார். இதற்கு மேட்டுக்குடி சின்னதுரை உள்ளிட்டோர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணாதுரை குடியாத்தம் தாலுகா போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சின்னதுரை உள்பட 5 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி அந்த வழியாக வந்த மினி பஸ்சை சிறைபிடித்து 200–க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து போலீசார் அழைத்து சென்றவர்களை விடுவித்தனர். இதனையடுத்து மினி பஸ் விடுவிக்கப்பட்டு விழா தொடர்ந்து நடைபெற்றது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story