மாணவியை கற்பழித்த தனியார் பள்ளி பஸ் டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில்


மாணவியை கற்பழித்த தனியார் பள்ளி பஸ் டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 4 May 2018 4:49 AM IST (Updated: 4 May 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் மாணவியை கற்பழித்த வழக்கில் தனியார் பள்ளி பஸ் டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

புனே,

புனேயில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த 11 வயது மாணவி பள்ளிக்கூட பஸ்சில் சென்று வந்தாள். கடந்த 2016-ம் ஆண்டு அவளை பஸ் டிரைவர் சுதாம் கண்பத் (வயது52) என்பவர் கற்பழித்து உள்ளார். மேலும் அவர் தொடர்ச்சியாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறினாள். அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் பள்ளி பஸ் டிரைவர் சுதாம் கண்பத் மீது வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சுதாம் கண்பத் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்க்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய சிறப்பு கோர்ட்டு, சுதாம் கண்பத்துக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

Next Story