கர்நாடகத்தில் ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.98.71 லட்சம் பறிமுதல்


கர்நாடகத்தில் ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.98.71 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 4 May 2018 5:23 AM IST (Updated: 4 May 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பெங்களூரு,

கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறவும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும் தேர்தல் ஆணையம் சார்பில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கண்காணிப்பு குழுவினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாநிலம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதாக ரூ.98 லட்சத்து 71 ஆயிரத்து 320 ரொக்கமும், 5.14 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 24 மணிநேரத்தில் தேர்தல் நடத்தை விதிமீறியதாக 35 வழக்குகளும், மொத்தம் இதுவரை 873 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக் கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story