பாவூர்சத்திரம் அருகே பெண்ணுடன் உல்லாசமாக இருந்த போலீஸ் ஏட்டு சிக்கினார் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்


பாவூர்சத்திரம் அருகே பெண்ணுடன் உல்லாசமாக இருந்த போலீஸ் ஏட்டு சிக்கினார்  பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 5 May 2018 2:00 AM IST (Updated: 4 May 2018 7:08 PM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே, வீட்டு வேறொரு பெண்ணை அழைத்து சென்று உல்லாசமாக இருந்த போலீஸ் ஏட்டை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரம் அருகே, வீட்டு வேறொரு பெண்ணை அழைத்து சென்று உல்லாசமாக இருந்த போலீஸ் ஏட்டை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் ஏட்டு உல்லாசம் 

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு ஒருவர், அருகில் உள்ள குரும்பலாப்பேரியில் தனி வீடு எடுத்து தங்கி பணியாற்றி வருகிறார். இவருடைய குடும்பத்தினர் செங்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், போலீஸ் நிலையத்துக்கு குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக வரும் சில பெண்களுக்கு இந்த போலீஸ் ஏட்டு வலை விரித்து, தனது வீட்டுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்து உள்ளார்.

இது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இதனால், அவருடைய வீட்டு பகுதியில் பெண்கள் நடமாடுவதை தவிர்த்து வந்தனர்.

காம விளையாட்டு 

நாளுக்கு நாள் அந்த போலீஸ் ஏட்டுவின் காம விளையாட்டுகள் அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் தடுக்க திட்டமிட்டனர். போலீஸ் ஏட்டு என்பதால், அவரை எளிதாக கண்டிக்க முடியாத நிலையில் தொடர்ந்து அவருடைய நடவடிக்கைகளை பொதுமக்கல் கண்காணித்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் குடும்ப பிரச்சினை காரணமாக போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.

பெண்ணை மடக்கினார் 

அவருடைய செல்போன் எண்ணை வாங்கி கொண்ட ஏட்டு, வழக்கம் போல் அடிக்கடி அந்த பெண்ணிடம் காதல் மொழி பேசி, தனது வலையில் வீழ்த்தி உள்ளார். சம்பவத்தன்று அந்த பெண்ணை தனது வீட்டுக்கு போலீஸ் ஏட்டு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். இதை கவனித்த பொதுமக்கள், அந்த பெண்ணுடன் போலீஸ் ஏட்டை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

அந்த வீட்டை 10–க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்து சென்றனர். ஒருவர் சென்று வீட்டுக் கதவை தட்டினார். அப்போது, ‘யாருப்பா...’ என்ற உரத்த சத்தத்துடன் போலீஸ் தோரணையில் கைலியை சரி செய்து இடுப்பில் கட்டியவாறு, கதவை மெதுவாக ஏட்டு திறந்தார். வெளியில் நின்று கொண்டிருந்த 10–க்கும் மேற்பட்டோர் ‘திபு.. திபு’ வென ஏட்டை உள்ளே தள்ளிக் கொண்டு வீட்டுக்குள சென்றனர்.

கையும் களவுமாக சிக்கினர் 

அப்போது கட்டிலில் ஏட்டுடன் உல்லாசமாக இருந்த பெண் நிர்வாண கோலத்தில் இருந்தார். வீட்டுக்குள் பலர் வருவதை பார்த்த அந்த பெண் பதறி எழுந்துள்ளார். அவர் அருகில கிடந்த பாவாடையை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு வீட்டிக்குள் ஒரு மூலையில் கதறி அழுதவாறு முடங்கி உள்ளார். ஏட்டையும், அந்த பெண்ணையும் சிலர் வீடியோ படம் பிடித்தனர். தப்பி முயற்சித்த 2 பேரையும் அவர்கள் வீட்டுக்குள் மடக்கி உட்கார வைத்தனர்.

இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசாரிடம், இருவரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வாட்ஸ்–அப்பில் வைரலாக பரவி வருகிறது. போலீஸ் ஏட்டுவின் இந்த சம்பவம் நெல்லை மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது.

Next Story