திருச்சிக்கு அன்னாசி, முலாம் பழம் வரத்து அதிகரிப்பு
திருச்சிக்கு அன்னாசி, முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது.
திருச்சி
திருச்சி காந்திமார்க்கெட்டிற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பழ வகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் அன்னாசி பழம் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து அன்னாசி பழம் அதிக அளவில் திருச்சி மொத்த வியாபார கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்து சில்லறை வியாபாரிகள் மற்றும் பழ வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். அன்னாசி பழகம் ஒரு கிலோ ரூ.48-க்கு விற்பனையாகி வருகிறது.
இதேபோல் முலாம் பழம் வரத்தும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பழம் என்பதால் கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் அதிக அளவில் முலாம் பழத்தை வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் முலாம்பழ சாறும் குடிக்கின்றனர். இத்தகைய முலாம்பழம் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், சென்னை மார்க்கெட்டில் இருந்தும் திருச்சி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ முலாம்பழம் ரூ.28-க்கு விற்பனையாகிறது. சில்லறை கடைகளில் இவற்றின் விலை வேறுபடும்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே பழக்கடை ஒன்றில் விற்பனையான சில பழங்களின் விலைகள் கிலோ கணக்கில் வருமாறு:- வாஷிங்டன் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.198-க்கும், ஆரஞ்சு ரூ.90-க்கும், சாத்துக்குடி ரூ.67-க்கும், சப்போட்டா ரூ.40-க்கும், நாட்டு மாதுளை ரூ.123-க்கும், காபூல் மாதுளை ரூ.184-க்கும், இமாம்பசந்த் மாம்பழம் ரூ.168-க்கும், பங்கனபள்ளி ரூ.70-க்கும் விற்பனையாகிறது.
Related Tags :
Next Story