மாவட்ட செய்திகள்

வணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு இன்று நடக்கிறது + "||" + Merchant Society Conference State Convention is happening today

வணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு இன்று நடக்கிறது

வணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு இன்று நடக்கிறது
வேலப்பன்சாவடியில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
சென்னை,

மே மாதம் 5-ந் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை வேலப்பன்சாவடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35-வது வணிகர் தின மாநில மாநாடு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த ஆண்டு, இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக இந்த மாநாடு நடைபெற உள்ளது.


மாநாட்டுக்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். மாநாட்டில் அரசியல் தலைவர்கள், அகில இந்திய வணிகர்கள் பங்கேற்கிறார்கள். மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்கிறார்கள்.

அனைத்து வணிகர்களும் இன்று கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் பங்கேற்கிறார்கள். மாநாட்டையொட்டி வேலப்பன்சாவடியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு பந்தலை ஏ.எம்.விக்கிரமராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.