திருத்துறைப்பூண்டி அருகே மரத்தில் லாரி மோதல்; டிரைவர் பலி


திருத்துறைப்பூண்டி அருகே மரத்தில் லாரி மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 5 May 2018 5:00 AM IST (Updated: 5 May 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே மரத்தில் லாரி மோதியதால் டிரைவர் பலியானார்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே மரத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

அரியலூரில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நேற்று அதிகாலை வந்த போது லாரி டிரைவர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து மடப்புரம் சாலையோரத்தில் உள்ள பனைமரத்தின் மீது மோதி விட்டு அருகில் இருந்த வாய்க்காலில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் லாரி டிரைவர் அரியலூர் மாவட்டம் கோவிந்தப்புத்தூரை சேர்ந்த கலையரசன் மகன் கலைசெல்வன் (வயது 26) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று லாரியின் அடியில் சிக்கியிருந்த கலைசெல்வன் உடலை 1 மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story