கல்லூரி பஸ் மரத்தில் மோதி 2 மாணவிகள் காயம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் மாட்லாம்பட்டியில் தனியார் மகளிர் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
காரிமங்கலம்,
இந்த நிலையில் நேற்று மதியம் தேர்வு முடிந்து அரியகுளத்திற்கு கல்லூரி பஸ் புறப்பட்டது. பஸ்சில் 40 மாணவிகள் பயணம் செய்தனர். அந்த பஸ்சை பென்னாகரம் ஒன்றியம் இண்டூரை அடுத்த பங்குநத்தம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்(வயது 24) என்பவர் ஓட்டி சென்றார்.
அந்த பஸ் மாட்லாம்பட்டி- கெங்குசெட்டிப்பட்டி வழியாக அரியகுளத்துக்கு உத்தாரன் கொட்டாய் என்ற இடத்தில் சென்ற போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையை விட்டு பள்ளத்தில் இறங்கிய பஸ் அங்கிருந்த புளியமரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி இயற்பியல் படிக்கும் மாணவி அனிதா(19) மற்றும் முதலாமாண்டு பி.ஏ.ஆங்கிலம் படிக்கும் நந்தினி (18) ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இருவரையும் சகதோழிகள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story