சட்டவிரோதமாக ரெயில்வே இ-டிக்கெட்டுகள் பதிவு செய்தவர் கைது
மும்பை ஒஷிவாராவில் உள்ள ஒரு அலுவலகத்தில் சட்டவிரோதமாக ரெயில்வே டிக்கெட்டுகள் பதிவு செய்யப்படுவதாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
மும்பை,
ரெயில்வே கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த அலுவலகத்தில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது, அங்கு சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி 6 ஆயிரத்து 603 டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 47 லட்சம் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக ரெயில் டிக்கெட்டுகள் பதிவு செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் அங்கிருந்த ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 80 ரெயில்வே இ-டிக்கெட்டுகள் மற்றும் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Related Tags :
Next Story