வேலைவாய்ப்பு முகாம் மூலம் 308 பேருக்கு பணி நியமன ஆணை
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. முகாமில் சிறந்த மகளிர் சுய உதவிகுழுவினர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும், கீழப்பழூர் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கி பேசும்போது, ‘இந்த வேலைவாய்ப்பு முகாமில், 821 பேர் கலந்துகொண்டனர். இதில் 308 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள் ளன. 13 முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றனர். அரியலூர் மாவட்டத்தில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் தங்களுடைய கல்வி தகுதி மற்றும் திறமைகளுக்கேற்ப பணிகளை இளைஞர்கள் தேர்ந்தெடுத்து பயன்பெறலாம்’ என்று கூறினார். முன்னதாக கலெக்டர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு நிறு வனங்களின் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் அரங்கு களையும் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை கண்காட்சியையும் பார்வையிட்டார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திட்ட இயக்குனர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) லலிதா வரவேற்றார். முடிவில் உதவி திட்ட அலுவலர் சரவணபாண்டியன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story