மாவட்ட செய்திகள்

தமிழ் மொழி இடம்பெற்ற முன்பதிவில்லா ரெயில் டிக்கெட் வினியோகம் தொடங்கியது + "||" + Preliminary Railway Ticket Delivery started in Tamil language

தமிழ் மொழி இடம்பெற்ற முன்பதிவில்லா ரெயில் டிக்கெட் வினியோகம் தொடங்கியது

தமிழ் மொழி இடம்பெற்ற முன்பதிவில்லா ரெயில் டிக்கெட் வினியோகம் தொடங்கியது
திருச்சி கோட்டத்தில் தமிழ் மொழி இடம்பெற்ற முன்பதிவில்லா ரெயில் டிக்கெட் வினியோகம் தொடங்கியது.
திருச்சி,

முன்பதிவில்லா ரெயில் டிக்கெட்டில் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமே இடம்பெற்றிருந்தது. இந்தநிலையில் முன்பதிவில்லா ரெயில் டிக்கெட்டில் அந்தந்த மாநிலங்களின் பிராந்திய மொழிகளும் இடம்பெறும் என ரெயில்வே மந்திரி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தெற்கு ரெயில்வேயில் சோதனை முறையாக திருச்சி, சென்னை சென்டிரல், சேலம், மதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் முன்பதிவில்லா டிக்கெட்டில் தமிழ் மொழியில் புறப்படும் மற்றும் சேரும் இடம் குறிப்பிடப்பட்டு வினியோகிக்கப்பட்டன.


இதனைத்தொடர்ந்து தெற்கு ரெயில்வே முழுவதும் ரெயில் நிலையங்களில் முன்பதிவில்லா டிக்கெட்டில் தமிழ் மொழி இடம்பெறும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தமிழ் மொழி இடம்பெற்ற முன்பதிவில்லா டிக்கெட் வினியோகம் நேற்று முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்தது.

பயணிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து திருச்சி கோட்ட ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “திருச்சி கோட்ட ரெயில்வே எல்லைக்குட்பட்ட ரெயில் நிலையங்களில், முன்பதிவில்லா ரெயில் டிக்கெட்டில் தமிழ் மொழி இடம்பெறுவதற்கான மென்பொருள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் தமிழ் மொழி இடம்பெற்ற முன்பதிவில்லா டிக்கெட் வினியோகம் தொடங்கியது“ என்றார்.

பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட்டை ஆர்வமுடன் வாங்கி, அதில் தமிழ் மொழி இடம்பெற்றிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.