மாவட்ட செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ரவுடி கைது + "||" + The police arrested the sickle cut raid for the sub-inspector

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ரவுடி கைது

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ரவுடி கைது
திருவெண்காடு அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்காடு,

நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே நாங்கூர் பகுதியில் சம்பவத்தன்று திருவெண்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மேலநாங்கூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் இலக்கியராஜ் (வயது 34) என்பவரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த இலக்கியராஜ் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் கணேசனை வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். அப்போது பணியில் இருந்த மற்ற போலீசார் இலக்கியராஜை மடக்கி பிடித்தனர்.

கைது

இதுகுறித்து திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி வழக்குப்பதிவு செய்து இலக்கியராஜை கைது செய்தார். கைது செய்யப்பட்ட இலக்கியராஜ் மீது திருவெண்காடு, சீர்காழி, பொறையாறு ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அரிவாளால் வெட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.