மாவட்ட செய்திகள்

தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது + "||" + The young man attacked the worker

தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
திருவண்ணாமலை அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள சின்ன கோட்டாங்கால் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 38), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த படையப்பா (20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது படையப்பா மற்றும் சிலர் சேர்ந்து குமாரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, படையப்பாவை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.