பொதட்டூர்பேட்டை அருகே மின்கம்பி திருட்டு; வாலிபர் கைது


பொதட்டூர்பேட்டை அருகே மின்கம்பி திருட்டு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 May 2018 5:13 AM IST (Updated: 6 May 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

பொதட்டூர்பேட்டை அருகே மின்கம்பி திருட்டு தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடை பட்டது.

இதை பயன்படுத்தி பாண்றவேடு கிராமத்திற்கு செல்லும் சாலையில் பொதட்டூர்பேட்டை அருகே கன்னிகாபுரம் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள மின்கம்பத்தில் 100 மீட்டர் மின்கம்பியை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றார்.

இது குறித்து மின்துறை அதிகாரிகள் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை விசாரணை செய்ததில் பொதட்டூர்பேட்டை புதூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 24) என்பவர் மின்கம்பியை திருடிச்சென்றது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story