துணை கலெக்டர் உள்ளிட்ட அனைத்து பணி மாறுதல்களிலும் கலந்தாய்வு முறையை கடைபிடிக்க வேண்டும்
துணை கலெக்டர் உள்ளிட்ட அனைத்து பணி மாறுதல்களிலும் கலந்தாய்வு முறையை கடைபிடிக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை,
தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் ரகுநாதன், அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சக்திவேல் வரவேற்றார். இதில் மாநில பொது செயலாளர் சுந்தர்ராஜன், சட்ட ஆலோசகர் குமரன், தமிழ்நாடு தலைமை செயலக அலுவலர் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதியக்குழுவின் 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். வருவாய்த்துறையை சிறப்பு துறையாக அறிவித்து தலைமை செயலகத்திற்கு இணையான ஊதியம் வழங்க நிர்வாக ஆணையரின் பரிந்துரையை அரசு ஆணையாக வெளியிட வேண்டும்.
ரூ.1 கோடி கருணை தொகை
காலிபணியிடங்களை எந்தவித நிபந்தனைகள் இன்றியும் நிரப்ப வேண்டும். அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும். கனிமவள சுரண்டல் மற்றும் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பணியின்போது சமூகவிரோத சக்திகளால் தாக்கப்பட்டு மற்றும் இயற்கை இடர்பாடு நிவாரண பணியின்போது உயிரிழப்பு ஏற்படும்போது காவல்துறையில் வழங்குவது போன்று ரூ.1 கோடி கருணை தொகை வழங்க வேண்டும். துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியல் வெளியிடுவதில் நிலவும் முறைகேடுகளை களைய வேண்டும். துணை கலெக்டர் உள்ளிட்ட அனைத்து பணி மாறுதல்களிலும் கலந்தாய்வு முறையை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் முரளி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story