கோவில்பட்டி அருகே விவசாயி வீட்டில் நகை- பொருட்கள் திருட்டு


கோவில்பட்டி அருகே விவசாயி வீட்டில் நகை- பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 7 May 2018 9:30 PM GMT (Updated: 7 May 2018 8:10 PM GMT)

கோவில்பட்டி அருகே விவசாயி வீட்டில் நகை, பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்தவர் செய்யது அகமது (வயது 49). விவசாயி. இவருக்கு சொந்தமாக கோவில்பட்டி சாலைப்புதூர், முனைஞ்சிப்பட்டியில் விவசாய பண்ணைத் தோட்டங்கள் உள்ளன. இவர் கடந்த மாதம் 29-ந் தேதி தன்னுடைய குடும்பத்தினருடன் முனை ஞ்சிப் பட்டியில் உள்ள தனது பண்ணைத் தோட்டத்தில் சென்று தங்கினார்.

பின்னர் நேற்று காலையில் அவர் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, மடிக்கணினி, கேமரா உள்பட பல பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவிஜயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில்,‘ செய்யது அகமதுவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று நள்ளிரவில் அவரது வீட்டின் கதவு, பீரோவை உடைத்து நகைகள், பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story