ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது
ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டையில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் கே.கே.வலசு அரசு மதுபானக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணியை முடித்துக்கொண்டு புதுப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர்.
அவர் வீட்டுக்குள் சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கண்ணனை சேலையால் கட்டிப்போட்டு, கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணம் ரூ.ஆயிரத்தையும், பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர்.
அதேபோல் ராசிபுரத்தைச் சேர்ந்த வக்கீல் ஒருவரது வீட்டில் 2 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதேபோல் ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி விநாயகா பேக்கரி முன்பு சென்று கொண்டிருந்த கார் டிரைவர் ஜான் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி 2 பவுன் தங்க சங்கிலி, ரூ.2 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்து சென்றனர். இதுபற்றி நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின் பேரில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்லமுத்து (ராசிபுரம்), மணிகண்டன் (நாமகிரிபேட்டை) மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று சேலம் தம்மநாயக்கன்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த பில்லா என்கிற மயில்ராஜ் (வயது 26) மற்றும் சேலம் நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பம்பாய் என்கிற ராஜேந்திரன் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் ராசிபுரம் வக்கீல் வீட்டில் திருடியதையும், புதுப்பாளையம் மதுபானக்கடை விற்பனையாளர் வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கண்ணன் வீட்டில் கொள்ளையடித்த 6 பவுன் தங்க நகையும், ரொக்கப் பணம் ரூ.ஆயிரத்தையும், ராசிபுரம் வக்கீல் வீட்டில் கொள்ளையடித்த 2 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தையும் போலீசார் மீட்டனர்.
அதேபோல் நாமகிரிபேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காக்காவேரி பகுதியில் கார்டிரைவர் ஜான் என்பவரிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக சேலம் தம்மநாயக்கன்பட்டி தீரானூர் கலர்காடு பிளாட்டைச் சேர்ந்த கார்த்திக் (23) மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பாளையூர் அய்யம்பெருமாம்பட்டியைச் சேர்ந்த சதீஸ் என்கிற சதீஸ்குமார் (24) ஆகிய 2 பேர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேர்கள் மீதும் நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களிடம் இருந்து 2 பவுன் நகை மற்றும் ஆயிரம் ரூபாயையும் போலீசார் மீட்டனர். இந்த வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினார்கள்.

Related Tags :
Next Story