கத்திமுனையில் மிரட்டி பெண் பலாத்காரம் ரவுடி கும்பலை சேர்ந்த 3 பேர் கைது
சேலத்தில் மசாஜ் சென்டர்களுக்குள் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் புகுந்து பெண்களிடம் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், கத்திமுனையில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரபல ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
சேலம் மாநகரில் 50-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் உள்ளன. இங்கு உடல் அளவிலும், மனதளவிலும் சோர்வடைந்து இருப்பவர்களுக்கு மசாஜ் செய்வதின் மூலம் இளைப்பாறுதலையும், உற்சாகத்தையும் அளிப்பதால் ஆண்களும், பெண்களும் அதிகளவில் படையெடுத்து வருகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் சேலத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் மசாஜ் சென்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில், சேலம் அஸ்தம்பட்டி காந்திரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் 10 பேர் கொண்ட ரவுடி கும்பல் திடீரென வந்தது. பின்னர், அந்த கும்பல் உள்ளே புகுந்து அங்கிருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தது. அப்போது, அங்கிருந்த காவலாளி மற்றும் பக்கத்து கடைக்காரர்கள், அந்த ரவுடி கும்பலை தடுக்க முயன்றனர். அப்போது ரவுடிகள், ‘யாராவது தடுத்தால் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவோம்’ என மிரட்டிய படி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து அழகாபுரம் தோப்புக்காடு பகுதியில் இயங்கி வரும் மற்றொரு மசாஜ் சென்டருக்கு சென்ற அந்த ரவுடி கும்பல், அங்கிருந்த பெண்களை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதனால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அழகு கலை நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்து பயத்தில் அலறினார்கள்.
இதனை தொடர்ந்து பள்ளப்பட்டி சினிமா நகர் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு ரவுடிகள் சென்றனர். பிறகு அவர்கள் உள்பக்கமாக கதவினை பூட்டிவிட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்களை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்தனர். மேலும், ஒரு பெண்ணை அங்குள்ள அறைக்கு அழைத்து சென்று கத்திமுனையில் 3 ரவுடிகள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய அவர்கள், தாங்கள் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். சினிமாவில் வருவது போல இந்த சம்பவம் நடந்ததால் மசாஜ் சென்டர்களில் பணிபுரியும் பெண்கள் மத்தியில் இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் ஒரே நாளில் அஸ்தம்பட்டி, அழகாபுரம், பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் நகை, பணம் கொள்ளை மற்றும் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் நேற்று முன்தினம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில் 3 போலீஸ் நிலையங்களிலும் தனித்தனியாக புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, சேலம் ஜான்சன்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி எலும்பன் கார்த்திக் (வயது 36) மற்றும் அவனது கூட்டாளிகள் விஜயகுமார் (27), விக்னேஷ் (23) உள்ளிட்ட 10 பேர், மசாஜ் சென்டர்களுக்குள் புகுந்து பெண்களிடம் நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து எலும்பன் கார்த்திக், விஜயகுமார், விக்னேஷ் ஆகிய 3 ரவுடிகளை அஸ்தம்பட்டி போலீசார் நேற்று கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ள எலும்பன் கார்த்திக் தலைமையிலான ரவுடிகள், சேலத்தில் உள்ள மசாஜ் சென்டர்களுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள பெண்களிடம் நகை, பணத்தை பறித்து சென்றிருப்பதும், அழகான பெண்கள் யாராவது இருந்தால் அவர்களை கத்திமுனையில் மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு வெளியில் தெரிவித்தால் குடும்பத்தினருடன் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி சென்றதும் தெரியவந்தது.
இதனால் ரவுடிகளுக்கு பயந்து பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் தற்போது போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்ததை தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ரவுடிகளை பிடிக்கும் வேட்டை தொடங்கியுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள மற்ற 7 ரவுடிகள் யார், யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என வலைவீசி தேடி வருகிறோம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, பள்ளப்பட்டி சினிமா நகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் சம்பவத்தன்று மேலும் ஒரு பெண்ணை ரவுடிகள் சிலர் பலாத்காரம் செய்ததாகவும், ஆனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தரப்பில் போலீசில் இதுவரை புகார் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story