கொள்ளிடம் ஆற்றில் இளம்பெண் கொன்று புதைக்கப்பட்டாரா? எலும்புகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் இளம் பெண் கொன்று புதைக்கப்பட்டாரா? என்று ஆற்றில் சிதறி கிடந்த எலும்புகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மேலபுனவாசல் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆறு தண்ணீர் இல்லாமல் மணற்பாங்காக பாலைவனம் போல காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் இருந்த கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசியது. அப்பகுதியில் நாய்களும் சுற்றி திரிந்தன. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் நேற்று ஆற்றில் இறங்கி பார்த்தபோது மனிதனின் தாடை மற்றும் எலும்பு துண்டுகள் சிதறி கிடந்தன. இதுகுறித்து திருவையாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி மற்றும் போலீசார் கொள்ளிடம் ஆற்றுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஒரு பெண்ணின் பிணம் புதைக்கப்பட்டிருப்பதும், அந்த பெண்ணின் உடல் பாகங்கள் நாய்களால் கடித்து குதறப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் அங்கு பெண்கள் அணியும் கைகெடிகாரம் ஒன்றும், வளையல், சேலை, உள்ளாடை மற்றும் கத்தி ஒன்றும் கிடந்தது. இதைத்தொடர்ந்து வேறு தடயங்கள் ஆற்றில் கிடக்கிறதா? என போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் வேறு தடயங்கள் கிடைக்கவில்லை.
நாய்களால் கடித்து குதறப்பட்ட உடல் பாகங்களை டாக்டர்கள் கொள்ளிடம் ஆற்றிலேயே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கற்பழித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story