ரேஷன் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
நாகையில் ரேஷன் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்,
நாகை புதுத்தெருவில் உள்ள ரேஷன் கடையில் ஞானபிரகாசம் (வயது53), அழகுமலை (38) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் பணியில் இருந்தபோது ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக வந்த சிறுவனிடம் விற்பனை முடிந்துவிட்டது நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று ஞானபிரகாசமும், அழகுமலையும் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து சிறுவன் தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதையடுத்து சிறுவனின் தந்தை அவரது அண்ணன் ஆகியோர் ரேஷன் கடைக்கு சென்று ஊழியர்களிடம் தகராறு செய்து தாக்கி, ரேஷன் கடையை சூறையாடினர். இதில் காயமடைந்த ரேஷன் கடை ஊழியர்கள் ஞானபிரகாசம், அழகுமலை ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இணை செயலாளர் தமிழ்செல்வன், துணை தலைவர்கள் ராஜா, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.
மாநில பொது செயலாளர் சவுந்திரராஜன், பொருளாளர் நெடுஞ்செழியன், துணை தலைவர் பிரகாஷ், பொதுக் குழு உறுப்பினர் ஆடியபாதம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ரேஷன் கடை ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நியாய விலைக்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட கிளை தலைவர் ரமணராம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story