மாவட்ட செய்திகள்

ஊர் சுற்றிப்பார்க்கும் ஆசையில் வீட்டை விட்டுச் சென்ற மாணவர்கள் மதுரையில் கண்டுபிடிப்பு + "||" + The students who left home in the desire to look around in the town find the discovery in Madurai

ஊர் சுற்றிப்பார்க்கும் ஆசையில் வீட்டை விட்டுச் சென்ற மாணவர்கள் மதுரையில் கண்டுபிடிப்பு

ஊர் சுற்றிப்பார்க்கும் ஆசையில் வீட்டை விட்டுச் சென்ற மாணவர்கள் மதுரையில் கண்டுபிடிப்பு
வில்லியனூரில் பள்ளி கோடை விடுமுறையின்போது வேலைக்கு சென்ற மாணவர்கள் வீடு திரும்பாமல், ஊர் சுற்றிப்பார்க்கும் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறினார்கள். மதுரையில் இருப்பதை கண்டுபிடித்து போலீசார் அவர்களை மீட்டு வந்தனர்.
வில்லியனூர்,

வில்லியனூர் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்லா, டிரைவர். இவருடைய மகன் முகமது இர்பான் (வயது 14). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர் அலி. இவருடைய மகன் முகமது பைசல் (13). இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி வில்லியனூரில் ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வந்தனர்.


சம்பவத்தன்று இருவரும் வேலைக்கு சென்றனர். அதன்பின் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் மகன்கள் வேலை பார்த்து வந்த ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் வேலை முடிந்து சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் தேடிப்பார்த்தபோதிலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் ஓட்டலில் வேலை பார்த்ததன் மூலம் கிடைத்த சம்பள பணத்தை வைத்து ஊர் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டனர். இதைத்தொடர்ந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினர். இதற்காக அவர்கள் பஸ் ஏறி மதுரை சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மாணவர் ஏற்கனவே உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தநிலையில் மதுரைக்கு அவர்கள் சென்று இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து வில்லியனூர் போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று மாணவர்கள் முகமது இர்பான் மற்றும் முகமது பைசல் ஆகிய இருவரையும் மீட்டனர். பின்னர் அவர்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
“மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” என்று ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
2. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. உணவு பொருட்களின் கலப்படத்தை மாணவர்கள் பரிசோதிக்க வேண்டும்; மாவட்ட அதிகாரி கலைவாணி பேச்சு
வீடுகளில் உள்ள உணவு பொருட்களின் கலப்படத்தை மாணவர்கள் பரிசோதிக்க வேண்டும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணி கூறினார்.
4. அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள்: தனியார் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்த வேண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
குறைவான மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில் தனியார் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
5. பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: அரசு பள்ளியை சூறையாடி மாணவர்கள் ரகளை மேஜை, நாற்காலிகளை உடைத்து நொறுக்கினர்
பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளியில் மேஜை, நாற்காலிகளை உடைத்து மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.