மாவட்ட செய்திகள்

நகைக்கடை அதிபரை வெட்டி கொள்ளை முயற்சி முன்னாள் கவுன்சிலர் மகனுக்கு வலைவீச்சு + "||" + Throwing the jeweler's chairperson is trying to screw the former councilor's son

நகைக்கடை அதிபரை வெட்டி கொள்ளை முயற்சி முன்னாள் கவுன்சிலர் மகனுக்கு வலைவீச்சு

நகைக்கடை அதிபரை வெட்டி கொள்ளை முயற்சி முன்னாள் கவுன்சிலர் மகனுக்கு வலைவீச்சு
திண்டுக்கல்லில், நகைக் கடை அதிபரை வெட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்,

திண்டுக்கல் கோபால்நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). அவருடைய மனைவி ராஜாத்தி. இவர்கள், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் அருகே உள்ள குழந்தை வேலப்பன் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். கணவன், மனைவி இருவரும் கடைக்கு சென்று நகை விற்பனையில் ஈடுபடுவது வழக்கம்.


இந்தநிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில், ராஜாத்தி அருகில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுவிட்டார். ஜெயராமன் மட்டும் கடையில் இருந்தார். அப்போது, திண்டுக்கல் சவுடம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் மோகன்ராஜ் (28) என்பவர் நகைக்கடைக்கு வந்தார்.

பின்னர், தான் வைத்திருந்த அரிவாளை காட்டி ஜெயராமனை மிரட்டி நகை தரும்படி கேட்டார். ஆனால் அவர் நகையை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகன்ராஜ், கடையில் இருந்த நகையை அள்ளி செல்ல முயன்றார். இதனை தடுத்த ஜெயராமனை, மோகன்ராஜ் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் அவருக்கு தலை, முகம், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. ஜெயராமனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் மோகன்ராஜ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். படுகாயம் அடைந்த ஜெயராமன், ரத்த வெள்ளத்தில் கடைக்குள்ளேயே சரிந்து விழுந்தார்.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் ஜெயராமனின் மனைவி, ராஜாத்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மோகன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர். தப்பியோடிய மோகன்ராஜின் தாயார் வசந்தா, மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள கடைக்காரர்களை, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதை மோகன்ராஜ் வழக்கமாக வைத்துள்ளார். தொடர்ந்து அவர் வழிப்பறியிலும் ஈடுபட்டு வந்தார். இவர் மீது வழிப்பறி, கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம ஆசாமிகள் கைவரிசை
திருப்பூரில் கருமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்து பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
3. கரிவலம்வந்தநல்லூர் அருகே கோவில்களில் 18 பவுன் நகை கொள்ளை 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
கரிவலம்வந்தநல்லூர் அருகே கோவில்களில் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயின.
4. ரூ.98 லட்சம் நகை கொள்ளை வழக்கு: சரணடைந்த 2 பேரை 6 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோவை கோர்ட்டு உத்தரவு
ரூ.98 லட்சம் நகை கொள்ளை வழக்கில் சரணடைந்த 2 பேரை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
5. மணல் கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணையை மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
மணல் கொள்ளை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணையை மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.