மாவட்ட செய்திகள்

தமிழக வாழ்வுரிமை கட்சி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு: மணல் குவாரி அமைய உள்ள இடங்களில் போலீஸ் குவிப்பு + "||" + The Tamil Livelihood Party decided to hold a siege fight Police concentration

தமிழக வாழ்வுரிமை கட்சி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு: மணல் குவாரி அமைய உள்ள இடங்களில் போலீஸ் குவிப்பு

தமிழக வாழ்வுரிமை கட்சி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு: மணல் குவாரி அமைய உள்ள இடங்களில் போலீஸ் குவிப்பு
நெல்லிக்குப்பம் அருகே அரசு மணல் குவாரி அமைய உள்ள இடங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்ததை தொடர்ந்து, அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே உள்ள மருதாடு, வான்பாக்கம், திருக்கண்டேஸ்வரம் பகுதி தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வான்பாக்கம் கிராமத்தில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் வேல்முருகன் தலைமையில் தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி அமைய உள்ள இடங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருந்தனர். பின்னர் மாவட்ட செயலாளர் ஆனந்த், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரிகள் அமைய உள்ள இடங்களை நேரில் பார்வையிட்டனர். இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவோடு இரவாக நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் 25–க்கும் மேற்பட்ட போலீசார் வான்பாக்கம், மருதநாடு, திருகண்டேஸ்வரம் ஆகிய கிராமங்களில் மணல்குவாரி அமைய உள்ள இடத்தில் குவிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 2–வது நாளாக 10 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்பு பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்
விருதுநகர் மாவட்டம் முழுவதும் 2–வது நாளாக பட்டாசு தொழிலாளர்கள் ஆலைகளை திறக்கக்கோரியும் நிவாரணம் வழங்கக்கோரியும் 10 இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
2. கடம்பூர் அருகே போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
கடம்பூர் அருகே போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
3. வங்கிகள் இணைப்புக்கு எதிராக தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் பேட்டி
திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் 2–வது மாநாடு நேற்று திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்றது.
4. கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்
கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.