மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Break the lock Jewelry, money robbery

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திருவள்ளூர் அருகே
தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தேசப்பன் (வயது 40). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி உஷா (35). இவர் திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.

இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகை, பணம் கொள்ளை

அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க நகையும், ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தேசப்பன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் அருகே பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: மர்ம ஆசாமிகள் கைவரிசை
திருப்பூர் அருகே பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
2. மூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ்
தூத்துக்குடி அருகே மூதாட்டியிடம் 6 பவுன் நகையை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
3. ஊராட்சி ஒன்றிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு
திருப்பத்தூரில் ஊராட்சி ஒன்றிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
4. ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5. இறைச்சி கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு
வடமதுரையில் இறைச்சி கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.