மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Hindu Frontiers demonstrated in Namakkal

நாமக்கல்லில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,

தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியில் ஆதிதிராவிடர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் வீடு மற்றும் வாகனங்களை இழந்த நபர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர் ராஜ்கமல் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் அரப்புளி, பாலகிருஷ்ணன், இளமுருகன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கலவரத்தை அடக்காத அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினர் கோ‌ஷங்கள் எழுப்பினர்.
தொடர்புடைய செய்திகள்

1. போக்குவரத்து கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி தஞ்சையில் 3 இடங்களில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. 25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி நாகையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. 25 சதவீத போனஸ் வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
25 சதவீத போனஸ் வழங்கக்கோரி திருவாரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் உழவர் பேரியக்கம் சார்பில் நடந்தது
விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்கக்கோரி உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.