திண்டிவனம்–திருவண்ணாமலை அகல ரெயில் பாதை திட்ட பணிக்கு இடம் கையகப்படுத்துவது குறித்து நில உரிமையாளர்களிடம் கருத்துகேட்பு கூட்டம்


திண்டிவனம்–திருவண்ணாமலை அகல ரெயில் பாதை திட்ட பணிக்கு இடம் கையகப்படுத்துவது குறித்து நில உரிமையாளர்களிடம் கருத்துகேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 14 May 2018 3:15 AM IST (Updated: 14 May 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம்–திருவண்ணாமலை அகல ரெயில் பாதை திட்ட பணிக்கு இடம் கையகப்படுத்துவது தொடர்பாக நில உரிமையாளர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது

திண்டிவனம்,

திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரை அகல ரெயில் பாதை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி திண்டிவனம் பகுதியில் ரெயில்பாதை அமைக்க இடம் கையகப்படுத்துவது குறித்து கருத்து கேட்பது மற்றும் நில உரிமையாளர்களிடம் ஆட்சேபனை மனுக்கள் பெறுவது குறித்த கூட்டம் திண்டிவனம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சப்–கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளிப்பது தொடர்பாக குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன் நில உரிமையாளர்கள் கொடுத்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் தாசில்தார்கள் கீதா, மெகருன்னிசா மற்றும் தென்னக ரெயில்வே அலுவலர்கள், நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story