மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகைகள், பணம் திருட்டு + "||" + The 32-pound jewelery, Money theft

அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகைகள், பணம் திருட்டு

அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகைகள், பணம் திருட்டு
திருக்குவளையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் திருக்குவளை அகரவெளி பகுதியை சேர்ந்தவர் சோமு(வயது64). இவர் திருக்குவளை தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நாகலட்சுமி கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக திருவாரூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.


இதனால் நாகலட்சுமியை பார்க்க சோமு வீட்டை பூட்டிவிட்டு திருவாரூருக்கு சென்றுவிட்டார். நேற்று காலை இவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் சோமுவின் உறவினர் ராதிகா என்பவர் சோமுவின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது.

ராதிகா இதுகுறித்து சோமுவுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வீட்டுக்கு சோமு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 32 பவுன் நகைகள், ரூ.6 ஆயிரத்து 500 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். நாகையில் இருந்து கைரேகை நிபுணர் கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

நாகையில் இருந்து மோப்பநாய் துலிப் வரவழைக்கப் பட்டது. மோப்ப நாய் வீட்டின் பின்புறமாக அருகில் உள்ள மின்சார நிலையம் மற்றும் மெயின்ரோடு வழியாக காருகுடி பஸ் நிலையம் வரை சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இது குறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடி சென்றவர்களை தேடி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை- ரூ.1 லட்சம் கொள்ளை காரையும் கடத்தி சென்றனர்
நொய்யல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை- ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த காரையும் கடத்தி சென்றனர்.
2. குளச்சல் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை– பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குளச்சல் அருகே ராணுவவீரர் வீட்டில் 2½ பவுன் நகை– பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
3. திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள்-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள், பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. அலுவலக பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு நாணயங்களையும் மர்ம நபர்கள் அள்ளி சென்றனர்
அறந்தாங்கியில் ஏஜென்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1½ லட்சத்தையும், மூட்டைகளில் வைத்திருந்த நாணயங்களையும் மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
5. பொள்ளாச்சியில் துணிகரம் வீடு புகுந்து 19 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை
பொள்ளாச்சியில் வீடு புகுந்து 19 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-