மாவட்ட செய்திகள்

ரெயிலில் அடிபட்டு பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பலி + "||" + Railway hits a petrol station worker

ரெயிலில் அடிபட்டு பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பலி

ரெயிலில் அடிபட்டு பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பலி
பாபநாசம் அருகே ரெயிலில் அடிபட்டு பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை கிராமம் ஆசாத்நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது42). இவர் ஆவூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தேன்மொழி (30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகின்றன. 2 மகன்கள் உள்ளனர்.


பாலசுந்தரம் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பண்டாரவாடையில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அவர் மீது, அந்த வழியாக சென்ற திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ரெயிலில் அடிபட்டு பாலசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

விசாரணை

இதுகுறித்து அவருடைய மனைவி தேன்மொழி தஞ்சை ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தஞ்சை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ், ஏட்டு குணசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.