மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு + "||" + The Government Town Bus Prison has been asked to drink water near Ambur

ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு

ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு
ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர்,

ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் சுட்டகுண்டா கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.


இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அக்கிராமத்திற்கு வந்த அரசு டவுன் பஸ்சை காலி குடங்களுடன் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு ஒன்றிய அதிகாரிகளும், உமராபாத் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. நடுக்கடலில் நடந்த அத்துமீறல்: கப்பலால் மோதி ராமேசுவரம் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படை - 4 மீனவர்களும் சிறைபிடிப்பு
நடுக்கடலில் ராமேசுவரம் விசைப்படகை மூழ்கடித்துவிட்டு அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிப்பு எதிரொலி: கூடலூரில் கேரள அரசு பஸ் சிறைபிடிப்பு - பா.ஜனதாவினர் 8 பேர் கைது
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சபரி மலையில் அவமதிப்பு செய்யப் பட்டதை கண்டித்து கூடலூரில் பா.ஜனதாவினர் கேரள அரசு பஸ்சை சிறைபிடித்தனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. வளவனூரில் விபத்து: பஸ் மோதியதில் புதுவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு
வளவனூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் புதுவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4. மாமல்லபுரம் அருகே பஸ்-கார் மோதல் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் பலி
மாமல்லபுரம் அருகே தனியார் பஸ்சும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. திருநன்றியூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற ஆட்டோ டிரைவர் பலி அரசு பஸ் மோதியது
திருநன்றியூர் அருகே அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆட்டோ டிரைவர் பலியானார்.