ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் 92-வது நாளாக போராட்டம்


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் 92-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 14 May 2018 10:11 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. நேரில் ஆதரவு தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

இதேபோன்று பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டிய புரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம், பாளையாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராம மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. நேற்று அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷங்களை எழுப்பினார்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 13 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

Next Story