மாவட்ட செய்திகள்

கைது செய்யப்பட்ட பயங்கரவாதி முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம் + "||" + The terrorist detained was planned to attack major cities

கைது செய்யப்பட்ட பயங்கரவாதி முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்

கைது செய்யப்பட்ட பயங்கரவாதி முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்
கைது செய்யப்பட்ட பயங்கரவாதி மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,

மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் பதுங்கியிருந்த பயங்கரவாதி பைசல் ஹசன் மிஸ்ராவை(வயது32) கைது செய்தனர். இவர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


மும்பை நிழல் உலக தாதா சோட்டா சகிலின் கூட்டாளியான பரூக் தேவதிவாலாவுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பைசல் ஹசன் மிஸ்ராவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மும்பை, குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமான பொது இடங்களில் இந்த தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்ததும், தனக்கான உத்தரவு வருவதற்காக காத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல் அருகே துணிகரம்: பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணம் கொள்ளை
திண்டுக்கல் அருகே, பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. திருவாரூரில்: வாலிபர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் - 2 பேர் கைது
திருவாரூரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. வால்பாறை அருகே முடீஸ் தபால் நிலையத்தில் திருட முயற்சி; தடுக்க முயன்ற அதிகாரியை தாக்கிவிட்டு கொள்ளையன் ஓட்டம்
வால்பாறை அருகே முடீஸ் தபால் நிலையத்தில் திருட முயற்சி நடந்தது. இதை தடுத்த அதிகாரியை கொள்ளையனை தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
4. விழுப்புரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி
விழுப்புரம் அருகே கிணற்றில் இறங்கி மின் மோட்டாரை சரி செய்தபோது விஷ வாயு தாக்கி 2 பேர் பலியானார்கள்.
5. காட்டு விலங்குகளின் தாக்குதல்: சேதம் அடைந்த பயிர்களுக்கும் இழப்பீடு - மத்திய மந்திரி தகவல்
காட்டு விலங்குகளின் தாக்குதலால் சேதம் அடைந்த பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க உள்ளதாக மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.