மாவட்ட செய்திகள்

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து வந்த காவலாளி கைது + "||" + The detainee arrested for raping a mentally challenged woman

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து வந்த காவலாளி கைது

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து வந்த காவலாளி கைது
வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து வந்த காவலாளி கைது செய்யப்பட்டார்.
மும்பை,

மும்பை பாந்திரா, மவுன்ட் மேரி ஆலயம் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 53 வயது மனநலம் பாதித்த பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று மனநலம் பாதித்த பெண்ணை பார்க்க அவரது மகள் வந்திருந்தார்.


இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டது. இதனால் தூக்கத்தில் இருந்து எழுந்த அவரது மகள் பார்த்தபோது மர்மநபர் ஒருவர் கதவை திறக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் உதவி கேட்டு சத்தம் போட்டார். இதனால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அவர் குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது கட்டிட காவலாளி ராம் (வயது32) மனநலம் பாதித்த பெண்ணின் வீட்டு கதவை கள்ளச்சாவி மூலம் திறக்க முயன்றது தெரியவந்தது. மேலும் அவர் அடிக்கடி நள்ளிரவு நேரத்தில் கள்ளச்சாவியை பயன்படுத்தி மனநலம் பாதித்த பெண்ணின் வீட்டிற்குள் சென்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் காவலாளி இரவு நேரத்தில் மனநலம் பாதித்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை கற்பழித்து வந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலாளி ராமை கைது செய்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு; தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 40 பேர் கைது
பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் எழுதப் பட்டிருந்த இந்தியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அழித் தனர். இதையொட்டி 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கோவிலில் விளக்கு ஏற்றிய தகராறு: தொழிலாளி அடித்து கொலை வாலிபர் கைது
கோவிலில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. தொழிலாளி மர்ம சாவு: உறவினர்கள் போராட்டம்; தோட்ட உரிமையாளர் கைது
தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு அவரது உடலை உறவினர்கள் வாங்கிச்சென்றனர்.
4. திருவாரூரில் தனியார் வங்கி மேலாளர் உள்பட 2 பேர் மீது தாக்குதல் 2 பேர் கைது
திருவாரூரில் தனியார் வங்கி மேலாளர் உள்பட 2 பேரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. விபசாரத்திற்கு மறுத்த சிறுமியை தாக்கிய வங்காளதேச பெண் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
வேலூரில் விபசாரத்தில் ஈடுபட மறுத்த சிறுமியை தாக்கிய வங்காளதேசத்து பெண் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.